Tuesday, November 24, 2009

மாவீரர் நாளை முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய ராஜபக்ச கட்டளை
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2009, 04:44.38 PM GMT +05:30 ]
எதிர்வரும் மாவீரர் நாளை (நவம்பர் 27) முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய கட்டளை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புச் செயலரின் உத்தரவுக்கமைய வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கை இராணுவ பாதுகாப்பை அரசு பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கடற்கரை ஓரங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment