Monday, March 14, 2011

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...?

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...?
பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 6 மார்ச், 2011

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.

ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள் நடமாட்டத்தையும் கடந்து மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.




20 நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள் கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான் பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில் விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டைபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல் , டீசல் , ரத்தம் , உணவு , மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலைபுலிகளுக்கு கொடுத்து வந்தார்.

1994 ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி இருந்த 80 விடுதலைப்புலிகளை தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும் போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள். இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

1995 ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொருப்பு முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொருப்பு சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர் கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளரா இருந்தார்.

ஆனால் சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள் பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது. மீண்டும் போலிசிடம் சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் ஏரியில் குதித்து இறந்தார்.

இதனால் அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப் பகை கொண்டார் அந்த சென்னை நபர். இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார் முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

1996 ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப்படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட் என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம் கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.




அந்த குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர் நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி, மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து செயல்பட்ட போது அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது. முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார். இளவரசன் குரூப்பில் இருந்த வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார் சிறையில் இருந்தார்.

ஆனால் அறிவழகனை போட மூலையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப் நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர் நபர் ஆகியோரும் இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

1999 முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில் மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல் உருவாகி பெரிய சண்டை நடந்தது.

தலித் கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில் இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில் சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட் கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான் கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர். இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு தீவிரமாக கட்சி பணி செய்தார். சுப. இளவரசன் குரூப்பில் இருந்து முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொருப்புக்கு வந்தனர். பொருப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன் தான் பார்த்தனர்.

போன மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின் மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில் முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.




முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார் கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன் முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

துண்டுபிரசுரம் வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான், சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட முத்துகுமாரிடம் மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

இந்த நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள் கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள் கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

மேலே நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின் டீம் தான் போட வந்தது என்பது தெரியவருகிறது.

இந்த நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

முத்துக்குமாரின் கூட இருந்த தோழர்கள் இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின் பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு தான் இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர் விடுதலைப்படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார். எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும் முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில் இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார்.

இப்ப நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம் வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும் முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க வில்லை தான்.

பெட்டி செய்தி:

ஒரு மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட மறுநாள் இறங்கல் கூட்டத்தில் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

ஆனால் அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த கருப்பு உருவத்தை பார்த்து கேட்க நான் ஐ.பி சென்னை.

முத்துக்குமாரை சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி தானா? என்பது தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

செம்பருத்தி.

Saturday, March 12, 2011

நேருக்கு நேராக வந்து வெட்டு யாருக்கு வெட்டு ஆழப்பதியுதுன்னு பார்ப்போம் ; சீமான்

நேருக்கு நேராக வந்து வெட்டு
யாருக்கு வெட்டு ஆழப்பதியுதுன்னு பார்ப்போம் ; சீமான்





புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது.


இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார்.




அவர் பேசும்போது, ’’எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள புதுக்கோட்டை நகரின் அண்ணாசிலைஅருகேயுள்ள பழக்கடையில் முத்துக்குமார் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைக்குசாட்சியாக காருடன் அறிவாள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்தரத்தமும், முத்துக்குமாரின் ரத்தமும் ஒத்துப்போகிறது, ஏற்கனவே அந்தக் கார் திருடப் பட்டிருக்கிறது.

ஆனால் இதுவரை கொலையாளி ஒருவர் கைதாகவில்லை.ஆனால்,உண்மைக்குற்றவாளியைத்தான் கைது செய்ய வேண்டும்.

எங்களுக்குத் தெரியும் இந்தக் கொலையையார் செய்திருப்பார்கள் என்று. காவல்துறையின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மார்ச் 20 -ம் தேதிவரை கெடுவைக்கிறோம். அதற்குப்பிறகும் கொலையாளிகள் கைதாகவில்லை என்றால் அப்புறம் சும்மா இருக்கமாட்டோம்.


அன்புன்னா அன்பு, வம்புன்னா வம்பு அதுதான் என் கொள்கை, ஆசாரி அடிச்சுவைத்துள்ளது யாரை வேண்டுமானாலும் வெட்டும், நேருக்கு நேராக வந்து வெட்டு பார்ப்போம் யாருக்கு வெட்டு ஆழப்பதியுதுன்னு பார்ப்போம்.

மீனவர்களை தாக்கினால் உன்மாணவர்களை தாக்குவேன்னு சொன்னேன். இதில் என்ன குற்றம் உள்ளது. நீ உன் தாக்குதலைநிறுத்திக்கோ, நான் நிறுத்திக்கிறேன். அதற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்.


ஆனால் இன்னமும் தமிழக மீனவன் செத்துக்கொண்டுதானே இருக்கிறான். ஏன், தடுத்துத்தமிழக கடற்படை தாக்கியதாக ஒரு செய்தி கூட இல்லையே ஏன்.


என்னையும், என்னுடைய அலைபேசியை மட்டுமே படை, படையாக கண்காணிக்கிறீர்களே,அந்தப்படையெல்லாம் எங்கே போயிற்று, இந்தக் கொலையாளிகளை கண்டிபிடிக்கவேண்டியதுதானே, இதுவும் ஒரு உயிர்தானே.


கொலையாளிகளை கண்டுபிடிக்கலைன்னா தமிழிகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதுகுறித்து முத்துக்குமார் படத்துடன் தமிழகமெங்கும் வீதிவீதியாக போராடுவேன்.எதிர்த்துப்பாருங்கள் அதன் விளைவு அப்போதுதெரியும்.நான் பிடிவாதக்காரன்என்பதைவிட முரட்டுப் பிடிவாதக்காரன்.


நாளை முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் முத்துக்குமார் கொலையைக் கண்டித்துகண்டனப்பொதுக்கூட்டம் நடைபெறும்.

மார்ச் 20-ம் தேதியில் இருந்து 25-ம் தேதிக்குள்கொளத்தூர் மணி, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களுள்,தமிழ்இனத்தை ஒன்றுதிரட்டி முற்றுகையிடுவோம், அது அண்ணா அறிவாளயமாகவும் இருக்கலாம் அல்லது பொது தபால்அலுவலகமாக செயல்படும் தலைமைச் செயலகமாகவும் இருக்கலாம்.


அதிலும் ஓயமாட்டோம், மீண்டும் புதுக்கோட்டையில் முத்துக்குமார் கொலைநடந்த இடத்தில் லட்சப் பேருடன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். ஆட்சிமாறினாலும் விடமாட்டேன்.


கொலை தொடர்பாக கலைஞர் காட்டும் மௌனம், எங்களுக்கு இக்கொலையில்காரணாக இருக்குமோ என்ற சந்தேகம் கலைஞர் மீது எழுகிறது.

தேடுங்க 20ம் தேதிக்குள்தேடுங்க, நல்ல வலையைக் கொண்டு தேடுங்க.எனக்கு மிரட்டல்கள் வந்தபோது என்னிடம் வந்து காவல்துறை கேட்டார்கள். உங்களுக்குபாதுகாப்பு தேவையா என்று, நான் தேவை என்றேன். யாருக்கு, என்னை அழிக்கத்துடிப்பவனுக்குத்தான் என்றேன்’’ என தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டு திலீபன் திடலில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டு திலீபன் திடலில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் " இந்த மாவட்டம் தற்போது புதுக்கோட்டை என்பதை விட புலிக்கோட்டை என்றும், வடகாடு என்பதை விட வவுனியா காடாகவும் மாறியிருக்கிறது.

தன்மீதான பற்றை விட தமிழினத்தின் மீதான பற்று தான் இதற்கு காரணம். இந்த மாவட்டத்தில் எங்களது இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நான் எங்கு பேசினாலும் எனக்கு பின்னால் பாதுகாப்பாக நின்றவர் முத்துக்குமார்.

முத்துக்குமாரை எங்களிடமிருந்து பறித்த அந்த கூட்டத்தை நான் விடமாட்டேன். பழி தீர்ப்பேன். இது தான் எங்கள் லட்சியத்தின் தமிழீழ விடுதலைக்கான அடித்தளம்.

காலத்தின் கட்டாயம். இனி தமிழன் மீது கைவைக்க எவனும் அஞ்சவேண்டும். முத்துக்குமார் கொலையில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த கொலையை யார் செய்தது என்று எங்களுககு தெரியும்.

உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை விடமாட்டோம். இன்னும் 20 நாளைக்குள் குற்றவாளியை கைது செய்வதாக காவல் துறை சொல்லியிருக்கிறது. அது வரை தான் கெடு.

அதற்கு மேல் கொலையாளிகள் கைதாகவில்லை என்றால், அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். முத்துக்குமார் படத்துடன் தமிழக வீதிகளில் போராடுவோம். எதிர்த்துப் பாருங்கள். அப்போது தெரியும்.

தமிழகத்தில் இந்த முறை தோற்பவர்களும், ஜெயிப்பவர்களும் இனி எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழ்நாடு தமிழனுக்கானது. தமிழன் தான் ஆளமுடியும்.

காங்கிரசை தமிழ்மண்ணில் இருந்து அகற்றும் வரை ஓய மாட்டோம். அதில் உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம். தி.முக. தற்போது எடுத்த முடிவை ஒராண்டிற்கு முன்னாள் எடுத்திருந்தால் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-10)
[ திங்கட்கிழமை, 07 மார்ச் 2011, 09:30.59 AM GMT ] [ நிராஜ் டேவிட் ]

உளவியல் நடவடிக்கைகள் (Psychological Operations) என்கின்ற மிக முக்கியமான விடயம் பற்றிய அறிவும் அதளிவும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருப்பது மிக மிக அவசியம் என்பதன் காரணமாக, இந்த விடயம் பற்றி சற்று ஆழமாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றித்தாம் தற்பொழுது ஆராந்துகொண்டு இருக்கின்றோம்.

அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி கடந்த இரண்டு மாதங்களாக இத்தொடரில் விரிவாகப் பார்த்து வருகின்றோம்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 323 ம் ஆண்டு காலப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெரும் வீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia) எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தும் உளவியல் நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டார் என்று முன்னர் பார்த்திருந்தோம்.

அதேபோன்று, 1162 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஆட்சியையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த மொங்கோலியத் தலைவர் கெங்கிஸ்கான், இந்த வகையிலான உளவியல் யுதத்தினை எவ்வாறு மேற்கொண்டார் என்றும் பார்த்திருந்தோம்.

இதேபோன்று ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது அமெரிக்கா எவ்வாறு இந்த வகை உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது என்றும் பார்த்திருந்தோம்.

வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா (Hanoi Hannah) என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்தது பற்றியும் ஓரளவு விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இரண்டாம் உலக மகாயுத்த காலகட்டத்தில் டோக்கியோ ரோஸ் ("Tokyo Rose") என்ற ஜப்பானியப் பெண் அமெரிக்கப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட உளவியல் போர் மற்றும் பீ.பீ.சி செய்தி ஊடகம் ஜேர்மனிய நாசிப்படைகளுக்கு எதிராக மேற்கொண்டிருந்த உளவியல் யுத்தங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைத் தடுமாறவைக்கும் படியான இந்தவகை உளவியல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு மேற்கொண்டார்கள்?

-இதுபற்றித்தான் தற்பொழுது சற்று சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளது கரந்தடிப் படையிலான போராட்ட வடிவம் பற்றியும், அந்தப் போராட்டத்தில் அவர்கள் நிகழ்த்திக் காண்பித்த சாதனைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போரியல் வல்லுனர்கள், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பெரிய ஆச்சரியத்தை வெளியிடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக, உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றியும், அதன் பரிமாணங்கள் பற்றியும் சிறிலங்கா இராணுவமே சரியாக அறிந்திராத காலகட்டத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி மிகுந்த ஆச்சரியத்தை போரியல் ஆய்வாளர்கள் வெளியிடுகின்றார்கள்.

1970ம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர்கள் எனப்படுபவர்கள் மலினப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகத்தான் இருந்து வந்தார்கள். மிகவும் பலவீனமான ஒரு இனமாகத்தான் காட்சி தந்தார்கள். அவர்களுடைய அடையாளங்கள் கூட, எளிமையானவைகளாகவும், இனிமையானவைகளாகவும் இருந்தன. குறிப்பாக யாழ்குடாவை எடுத்துக்கொண்டால், யாழ் இசைக்கருவியே அவர்களது அடையாளமாக இருந்து வந்தது. மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால, பாடும் மீனே அவர்களது அடையாளமாக இருந்து வந்தது.

மறுபக்கம் சிங்கள இனத்தை எடுத்துக்கொண்டால், அவர்களது சின்னம் சிங்கமாகவே இருந்தது வந்தது. அதாவது வீரம் மிக்க ஒரு இனமாகத்தான் சிங்கள இனம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. கரம் ஒன்றில் வெட்டும் வாளினைப் பிடித்தபடி கம்பீரமாகப் பார்க்கும் ஒரு சிங்கமே சிங்கள இனத்தை அடையாளப்படுத்த சிறிலங்காவின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டிருந்தது.

சிங்கள இனம் ஒரு வீரம் மிக்க இனம் என்ற கர்வம் சிங்களவர்களுக்கும் இருந்தது. சிங்களவர்கள் ஒரு வீரம்மிக்க இனத்தவர்கள் என்ற பார்வை தமிழர்களுக்கும் இருந்து வந்தது. (சிங்கள இனத்தவர்களை „மோட்டுச் சிங்களவர்கள்...முரட்டுச் சிங்களவர்கள்..“ என்று சிங்களவர்களுக்கு இருந்ததாக நம்பப்படுகின்ற வீரத்தை தமிழர்கள் ஏற்காமல் ஏற்றுக்கொண்டு வந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் தமிழர்கள் தமது ஆயதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.

சாத்வீகப் போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டி வீரச் சிங்களவர்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த தமிழர்கள், ஓரு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து விட்டார்களாம் என்ற செய்தி ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம் தமிழர்களை எடுத்துக்கொண்டால், இயல், இசை, நாடகம் என்ற ஒரு வட்டத்திற்குள் நின்றபடி, மிஞ்சினால் உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு என்று போராடிவிட்டு, ~தான் உண்டு தன் வேலை உண்டு| என்றிருந்த தமிழர்களுக்கும், ஆயுதப் போராட்டம் என்பது ஆரம்பத்தில் மிருந்த நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது.

சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போராட்ட அமைப்புக்களுக்கு மேற்கூறப்பட்ட இரண்டு தரப்பினருடைய உளவியல் ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்தது.

அதாவது தமிழர்களைக் கோழைகளாக எண்ணியிருந்த சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவேண்டிய ஒரு தேவை இருந்தது. அத்தோடு, பல தசாப்த காலமாகத் தம்மைப் பலவீனர்களாக எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களுக்கு, ஒரு கம்பீரத்தையும், வீர உணர்வினையும் ஏற்படுத்தவேண்டிய தேவை போராட்ட அமைப்புகளுக்கு இருந்தது.

இந்த உளவியல் தேவையை சந்திக்கும்படியான முதலாவது நகர்வினைச் செய்தவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்தான்.

தமது ஆயுதப் போராட்ட அமைப்பிற்கான பெயரையும், சின்னத்தையும் 'புலி" என்று உருவகப்படுத்தியதன் ஊடாக, ஒருவித உளவியல் நடவடிக்கையை எதிரி மீதும், தனது சொந்த இனத்தின் மீதும் பிரயோகித்தார் பிரபாகரன்.

பாரிய அளவில் வீரத்தை வெளிக்காண்பித்த சோழப் பேரரசின் சின்னமாக புலிச்சின்னமும், கொடியாகப் புலிக்கொடியும் இருந்ததால், தமிழர்களின் சாம்ராஜ்யம் மீண்டும் உதிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை வெளிப்படுத்தவே பிரபாகரன் ~புலியை தமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், சின்னமாக பொறித்திருந்தார்.

இருந்தபோதிலும், இந்தப் புலிச் சின்னம் ஒரு பெரிய உளவியல் நடவடிக்கையை எதிரிகள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்றுவரை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றது.

புலி என்பது சிங்கத்திற்கு நிகரான வீரத்தைக் கொண்டது. சிங்கத்தைச் சந்திக்கும் தைரியமும் காட்டில் புலிக்கு மட்டும்தான் உண்டு. தமிழில் உள்ளது போலவே புலி பற்றி நிறை பழமொழிகள் சிங்களத்திலும் உள்ளன. தமிழர்கள் வீரம் மிக்கவர்கள், தமக்கு அச்சத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்கின்ற எண்ணத்தை சிங்களவர்களுக்கு ஏற்படுத்த இந்தப் புலிச் சின்னம் தமிழர் தரப்பிற்குப் பெரிய அளவில் உதவவே செய்தது.

ஆரம்பத்தில் "புதிய தமிழ்ப் புலிகள்“ என்றுதான் தமது அமைப்பிற்குப் பெயரை வைத்தார் பிரபாகரன் - Tamil New Tigers- அதாவது TNT என்ற பெயரில்தான் தனது அமைப்பை சிங்களத்திற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். ரீ.என்.ரீ. என்பது உலகில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல்யமான வெடிபொருளின் (Trinitrotoluene) பெயர். அனைவரும் அச்சத்துடன் நோக்கும் அந்த வெடிபொருளின் பெயரிலேயே தமது அமைப்பின் பெரை வைத்ததுன் மூலம் எதிரியை அச்சப்படுத்தும் உளவியல் யுத்தத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தார் திரு.பிரபாகரன்.
1976 மே மாதம் 5ம் திகதி தமது அமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்து, தமிழீழம், அதன் விடுதலை தொடர்பான அந்தத் தமிழ் புலிகளின் வேட்கையையும் உலகிற்கு வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தார்.

எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான உளவியல் நடவடிக்கையை கடந்த 30 வருடங்களாக திரு.பிரபாகரன் தனது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் கச்சிதமாகச் செய்து வந்திருந்தார்.

ஈழப் போராட்ட களங்களில் திரு.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகளின் ஒருசில பக்கங்களை அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்…

nirajdavid@bluewin.ch

seeman safety

நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குனர் சீமான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரகசிய தகவல்கள்

வந்ததையடுத்து மிகவும் உஷாராக இருக்கிறார் அவர். அவரது அலுவலகம், வீடு எல்லா இடங்களுக்கு தனது நாம் தமிழர் இயக்க தொண்டர்களையே பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.


அது மட்டுமல்ல, அவரது வீடு அலுவலக வாசல்கள் எந்நேரமும் பூட்டப்பட்டே இருக்கின்றன. தெரிந்தவர்களோ, பத்திரிகையாளர்களோ வந்தால் கூட கவனமாக பரிசீலித்துதான் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

உயிருக்கு பயந்தவன் நான் இல்லை என்று அவர் சொன்னாலும், அவரை காப்பாற்ற வேண்டியது எங்கள் பொறுப்பு. அதனால்தான் இத்தனை பாதுகாப்பு என்கிறார்கள் அவருடன் இருக்கிற முக்கியஸ்தர்கள்.

அரசியல் வேலைகளில் பிசியாக இருந்தாலும், விஜய்யை அவ்வப்போது சந்தித்து பகலவன் பற்றியும் பேச நேரம் ஒதுக்குகிறார் சீமான். இருவரும் ஓரணிக்கு சாதமாக இருப்பதால் அரசியல் பற்றியும் விவாதிக்கிறார்களாம் இருவரும்.

இன்னொரு பக்கம் “ பகலவன் படத்தில் எப்போது நடிப்போம் என்று த்ரில்லாக இருக்கிறது” என்று மிகவும் எக்ஸைட் ஆகி தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் விஜய். இதற்கிடையில் சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி படத்தை ‘குரோதம்’ என்ற தலைப்புடன் டோலிவுட்டில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

che

சேகுவேராவிற்கு பின்னர் பிரபாகரன் தான் சிறந்த கெரில்லா தலைவர் - அனிதா பிரதாப்
[ சனிக்கிழமை, 12 மார்ச் 2011, 02:37.49 AM GMT ]

கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரன்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப். இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் இன்று இராஜபக்‌ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர்

seeman

இலங்கையில் தழிர்களைக் கொன்றொழித்து அவர்களுடைய வாழ்க்கை சிதறடிக்கவும், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்படுவதை தடுக்கத் தவறிய காங்கிரஸ் கட்சியை தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை நாம் தமிழர் கட்சி எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் ஆன்றோர்ப் பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈழத் தமிழனத்தின் 60 ஆண்டுக்கால விடுதலைப் போராட்டத்தை அழிக்க டெல்லி அரசு துணை போனது. அதற்குப் பாடம் புகட்ட வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, எந்தத் தொகுகளிலெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்து அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களிடம் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்து போட்டியிட்டாலும் அல்லது தனியே போட்டியிட்டாலும் அதனைத் தோற்கடிப்பதே தங்களது பணியாக இருக்கும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் போது ஒவ்வொரு தொகுதியிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்கக்கூடிய கட்சியின் சின்னத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் நாம் தமிழர் ஈடுபடும்.

ஈழத் தமிழனம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு சிதறிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கவே காங்கிரஸை தோற்கடிப்பது என்கின்ற ஒருமித்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதாக சீமான் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியின் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்வீர்களா என்று கேட்டதற்கு, எந்தக் கூட்டணிக்கும் ஆதரவாகவும் தங்களது பரப்புரை இருக்காது என்றும், தங்களது பரப்புரையின் ஒரே நோக்கு இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தடுப்பதாகவே இருக்கும் என்று பதிலளித்த சீமான், காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் நாங்கள் எந்தப் பரப்புரையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அப்பொழுது உங்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, காங்கிரஸை எதிர்ப்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்று சீமான் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சீமானுடன், இயக்குனர் மணிவன்னன், புலவர் கீ.தா.பச்சையப்பன், பேராசிரியர் இறைபுலவனார், பேராசிரியர் தீரன் ஆகியோர் இருந்தனர்.